Saturday, August 15, 2020

தொலைத்தொடர்பில் புதிய மைல் கல் 



இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் 10/8/2020 ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய நாள் . அன்று சென்னை - அந்தமான் இடையே  கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு காணொளி வழியாக அர்ப்பணித்தார். ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்ப்டும் இந்த  கண்ணாடி இழை கேபிள்கள் இந்திய நாட்டின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்க உள்ளன .

அந்தமான் நிகோபர்  தீவுகள்  அழகிய தீவுகள் அடங்கிய இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் . அதன் அமைதி சிந்தும் , அழகிய நீண்ட கடற்கரைகள்  வண்ண ஜாலங்களை நிகழ்த்தி காண்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் . பராட்டாங் தீவு, ராஸ் தீவு ,ஹவ்லாக் தீவு , நார்த்பே  தீவு என்னும் முக்கிய தீவுகளுடன்  572 தீவுகள் கொண்ட பிரதேசம் .தீவுகளுக்கிடையே நீர் வழிப்பயணமே  முக்கிய போக்குவரத்தாக உள்ளது . அந்தமானின் பழைமை வாய்ந்த செல்லுலர் சிறைச்சாலை  சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய குருதிக்குச் சான்றாக, கண்ணீர் கதைகளை சுமந்துக் கொண்டு   இன்றும் நிற்கிறது சுண்ணாம்பு குகைகள்,  பேரன் தீவின் (  Barren  ) புகையும் எரிமலை,  அரசின் மரத்தொழிற்சாலை , ஸ்கூபா டைவிங் ,  நீர் விளையாட்டுகள் , தீவுகளுக்கிடையில் செல்லும் கப்பல் பயணங்கள்,  இன்றும்  வெளி மனிதரைக் கண்டு மிரளும்  அந்தமானின் பழங்குடியினர்  என்று சுற்றுலா பயணிகளை ஈர்க்க பலவகை சங்கதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது அந்தமான்.  உண்மையில் இங்கு  சுற்றுலாவைத் தவிர மிகப் பெரிய தொழில் எதுவும் இல்லை . 

இப்பகுதியின் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் கல்கத்தாவை தலைமையாக கொண்டவை . தொலைதூர சேவைக்கு இதுவரை செயற்கைக்கோள் இணைப்புகள் பிரதானமாக இருந்தது .  இனி தொலைதூர சேவைகள் இந்த கேபிள்கள் வழியாக தொடரும். .காப்பர் கேபிள்களை விட தொலைதூர சேவைக்கு ஆப்டிகல் கேபிள்கள் உகந்தவை  .துல்லியம், வேகம் , அகன்ற ஒளிக்கற்றை என ஒப்பிடுகையில்  காப்பர் கேபிளை விட கண்ணாடி இழை கேபிள்கள் சிறந்தது . குரல் மற்றும் டேட்டா பரிமாற்றம் எவ்வித தடையும் இன்றி நடைபெறும் . இப்போது எனப்படும்  FTTH ( Fiber to the Home) சேவை  இந்த கேபிள்கள் மூலம் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது 


 சென்னையில் இருந்து அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு   கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது., இதற்கான நிதி உதவி இந்திய தொலைத்தொடர்பு இலாகாவின் நிதி திட்டமான USO Fund (Universal Social Obligation Fund) மூலம் அளிக்கப்பட்டது.கிராமப்புற சேவைகளை பலப்படுத்த வழக்கப்படும் நிதி உதவி இது  .ரூ.1,224 கோடி செலவாகும் இந்த திட்டத்தின்   கேபிள் பதிக்கும் பணி மற்றும் நிர்மாணப்  பணிகள் அரசுத் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ் .என் .எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கட்டுள்ளது . இத்துறையின் ஊழியரின் சீரிய பங்களிப்பில் , 24 மாதங்களில் பணி முடிக்கப்பட்டு , இம்மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .இந்த திட்டத்தின்படி கடலுக்கு அடியில் 2,312 கி.மீ. தொலைவுக்கு கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊடகத்தை  பி.எஸ்.என்.எல் மட்டுமன்றி தனியார் தொலைத்தொடர்பு கம்பெனிகளும் உபயோகிக்க  முடியும் 


சென்னை -போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தின் மூலம்  மேலும் சிறப்பான தொலைத்தொடர்பு வசதிகளை அந்தமான் மக்களுக்கு வழங்க இயலும் .தவிர இப்போது இருக்கும் இணையதள இணைப்புகளை விட நான்கு மடங்கு இணைப்புகளைத் தர முடியும் . இணையதள வேகமும் அதிகரிக்கும் .இந்த பணி முற்றிலும் முடிவடைந்த பின்னர் நொடிக்கு 400 GB  வேகம் கொண்ட இணையதள இணைப்புகள் போர்ட் பிளேரிலும் , ஏனைய தீவுகளில் 200 கஃப்ப்ஸ் வேகம் கொண்ட இணைப்புகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் .லேண்ட் தொலைபேசிகள் மற்றும் வயர்லெஸ் இணைப்புகள் வழியாக செயல்படும் இணைய இணைப்புகள் , துல்லிய அதிவேக சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது .


மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இணைய வசதி மிகவும் அவசியம் . ஆன்லைன் கல்வி, டெலி மெடிசின் , பிபிஓ சேவைகள் ,ஈ -காமர்ஸ், , வங்கிச் சேவைகள், சிறுதொழில் வளர்ச்சி சுற்றுலா பயணிகளின் பயன்பாடு இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த கண்ணாடி இழை கேபிள் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடலில் சப்மரின் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் திட்டங்களில் இது முதன்மையானது .
கடலோர எல்லைகளின் கட்டமைப்பு , பாதுகாப்பு இவை எல்லாம் தொலைத் தொடர்பு  சாதனகளின் உதவியுடன் கண்காணிக்கப்படும். பத்தாயிரம் கோடியில் காட் நிகொபார் பகுதியில் பெரிய துறைமுகம் ஒன்று கட்டப்பட உள்ளது. போர்ட் ப்ளேர் விமான நிலையமும் விரிவுப்படுத்தப்பட  திட்டங்கள் வகுக்குக்கப் பட்ட நிலையில் இந்த அதிவேக தொலைத் தொடர்பு வசதிகள் அந்தமானுக்கு வரமாக அமையும். தவிர கடல் வணிக தொடர்பு மையமாகவும், கடல் சார்ந்த பொருளாதாரத்தின் மையமாகவும்  (Blue economy hub) இப்பகுதி அமைய உள்ளது. 
 உயர்ந்த தொலைநோக்குடன் பாரதப் பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்ட இத்திட்டத்தின் வழியாய் அந்தமான் நிகோபர் பகுதியும் , இந்தியாவின் கடற் பகுதியும் பெரிதும் வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை .அவரின் மொழியில் "A country which has better network of ports and their connectivity will be able to provide a boost to trade in the 21st Century. Today, when India is moving forward with the resolve of self-sufficiency and is establishing itself as an important player in the Global Supply and Value Chain, it is very important to strengthen our network of Waterways and our Ports."
உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு கேந்திரமான இந்திய தொலைத்தொடர்பு புதிய உயரங்களை தொடும் .
(கட்டுரையாளர் பி.எஸ்.என்.எல் லின் ஓய்வு பெற்ற அலுவலர் )




நாட்டின் எல்லைப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு மேம் படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலோர எல்லைப் பகுதிகளின் உள் கட்டமைப்பும் பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் அந்தமானின் வடக்கு, மத்திய பகுதிகளில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. 1,200 பயணிகளை கையாளும் வகையில் போர்ட்பிஃளேர் விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின்கீழ் கடலில் தரையிறங்கும் விமான சேவை அந்தமானில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பெரிய நிகோபர் தீவில் ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய துறைமுகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் அதிகரிக்கும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். என பிரதமர் பேசினார் என்று விவரிக்கிறது அச்செய்தி. 

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...