சமுக வலைதளங்கள் Vs பெண்கள் பாதுகாப்பு -II
மரியா சிவானந்தம்
இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க , சமுக வலைதளங்களில் பெண்கள் கொண்ட ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பத்து வருடங்களில் முகனூல் , ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம் போன்ற வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளோர் எண்ணிக்கை பல மடங்காக பெருகி உள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள் வழியாக தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வது தினப்படி வழக்கமாகி விட்டது
பல்லாயிரம் பேர்
வந்துச் செல்லும் ஒரு பொது மேடையில் இவ்வாறு தகவல்களைப் பாதுகாப்பான வழியில் பகிர்ந்துக்
கொள்வது பற்றி போன இதழில் இரு தோழிகள் தங்கள்
எண்ணங்களை கூறினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து
இன்று மூன்று தோழிகள் நம்முடன் பகிர்ந்த கருத்துக்கள் இதோ
தீபா நாகராணி :(எழுத்தாளர் , பேச்சாளர் ,சமூக ஆர்வலர் )
என்னுடைய புகைப்படத்தை 'ஹேக்' பண்ணி காந்திமதி என்பவர் ஒரு முகநூல் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். இது தெரிந்ததும் முகநூல் நிர்வாகத்துக்கு 'ரிப்போர்ட் 'செய்தேன். அந்த ஐடி வைத்துள்ளவர் தன் பக்கத்தை பூட்டி வைத்துள்ளார். அதனால் அங்கு பகிரப்படும் செய்திகள் என்னவென்று தெரியவில்லை. இது போல நிறைய பேர் செய்கிறார்கள். அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் பிற வேலைகள் எதுவும் நடக்காது.
நம்மைப் பற்றிய செய்திகளை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒருசிலர் தம் சொந்த பிரச்சனைகளை முகநூலில் பதிவாக போடுகிறார்கள். அதைப் படித்த எதிர்பாலினர் ஆறுதல் சொல்வதாக காட்டிக் கொண்டு நம்மை மேலும் பலவீனப் படுததுவார்கள் .அந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தம் எல்லைகளை மீறுவார்கள்.அதே போல் நாம் வெளியில் செல்லும் தகவல்களையும் இங்கு பகிராமல் இருப்பது நலம் .
சுகுணா முத்துசாமி: (புகைப்பட கலைஞர், ஓவியர், இயற்கை வேளாண்மை)
சரியான விதத்தில் பயன்படுத்தினால் சமூக வலைத்தளங்கள் பெண்களுக்கு ஒரு நல்ல தளம். அரசியல்,சமூகம்,பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிக அழகாக இங்கு பதிவிடுகிறர்ர்கள். இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் ,மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தும் வணிகத்தலமாக இருப்பதால் பலர் இதனால் பயன் பெறுகிறார்கள். தவிர மனம் சார்ந்த சுமைகளை இறக்கி வைப்பதால்,மனம் அமைதியை பெறுகிறார்கள் . பெண்களுக்கான நல்ல தளமாகவே முகநூல், வாட்சப் போன்ற இடங்கள் இருக்கின்றன.
ரமா ஸ்ரீனிவாசன் (ஆன்மிகம் ,இசை, கலைகள்)
சத்சங்கம், செய்தித்தாள் , வாரபத்திரிகை என்று ஒரு காலத்தில் நம் பொழுதைக் கழித்தோம் .இப்போது சிறியவர் முதல் பெரியவர் வரை போன் மூலமாகவே எல்லாவற்றையும் அறிந்துக் கொள்கிறோம். இங்கு பாதுகாப்புடன் இருப்பது அவரவரைப் பொறுத்தே இருக்கிறது .நாம் எதில் ஆர்வம் காட்டுகிறோமோ அவற்றைப் பற்றி மட்டும் எழுதினால் வீணான எதிர்விளைவுகளை தடுக்கலாம் .யாரேனும் தேவையற்ற 'கமெண்ட்' போட்டால் இருக்கவே இருக்கிறது ரிப்போர்ட் மற்றும் ப்ளாக் வழிகள்.சமூக வலைத்தளங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துவது,பாதுகாப்பாக இருப்பது அவரவர் கையில் தான் இருக்கிறது.
தோழிகள் மூவருக்கும் நன்றி .
சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தினால் , அவை உங்களை ஒரு ஆளுமையாக உருவாக்கும்,
No comments:
Post a Comment