குருத்து ஞாயிறு முதல் உயிர்ப்பு ஞாயிறு வரை
மரியா சிவானந்தம்
. .இயேசு கிறிஸ்து சிலுவையில் துன்பங்கள் அனுபவித்து மறிந்த நாள் புனித வெள்ளி . புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படும் ,வெள்ளி அடங்கிய வாரத்தை புனித வாரம் என்று கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் அனுசரிக்கிறார்கள் .இந்த புனித வாரம் குருத்து ஞாயிறு அன்று துவங்கி , உயிர்ப்புத் திருநாளாம் ஈஸ்டர் உடன் முடிகிறது .
புனித வாரத்தின் முதல் நாள் குருத்து ஞாயிறு. .இயேசு கோவேரிக் கழுதையின் மேல் ஏறி ஜெருசலேம் நகருக்குள் வந்தபோது யூத மக்கள் அவரை ஒலிவ மரத்தின் கிளைகளுடன் , குருத்தோலைகள் உடனும் சென்று வரவேற்றனர் . அதற்கு முன்னம் பெத்தானியா ஊரைச் சார்ந்த லாசர் என்னும் இறந்துப் போன அவர் நண்பனை உயிருடன் எழுப்பினார் .அதைக் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்த மக்கள் இயேசுவை தம் அரசராக , தாவீது மன்னனின் வழித் தோன்றலாக ஏற்றுக் கொண்டு ஓசன்னா கீதம் பாடி வரவேற்றனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் , குருத்தோலைகளுடன் மக்கள் பாடல்கள் பாடிக் கொண்டு தேவனைப் போற்றி வாழ்த்தும் நிகழ்ச்சியே குருத்து ஞாயிறு .
"கண்ணுக்குக் கண் ,பல்லுக்குப் பல்" என்ற யூத சட்டங்களுக்கு பதிலாக "ஒரு கன்னத்தில அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு. மேலாடை கேட்பவருக்கு உள்ளாடையும் கொடு" என்று புதிய நீதியை போதிக்க வந்த தேவனின் மகன் இயேசு அமைதியும், அன்பையும் போதிக்க வந்தவர் , ஏழைகளுக்கும் , கைவிடப்பட்டோருக்கும் , அனாதைகளுக்கும் இரக்கத்தையும், கருணையையும் வாரி வழங்கியவர் . அவர் செய்த அற்புதங்களால் குருடர்கள் பார்வை பெற்றனர் , செவிடன் கேட்டனர்,ஊமைகள் பேசினார், இறந்தவர்கள் உயிர் பெற்றனர்.
.அதே சமயம் , அடக்குமுறையும் , பெண்ணடிமைத்தனமும் ஊழலும், வெளிவேடமும் மலிந்த யூதர்களின் மத அமைப்பினைச் சாடியவர். ஆலயங்களைக் கள்வர் கூடமாக்கி விட்டீர்களே" என்று சவுக்கால் அடித்துத் துரத்தியவர். "பாவம் செய்யாதவர் இவள் மேல் முதற் கல்லை எறியட்டும்" என்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு ஆதரவு தந்தவர் என்று பல முகங்களைக் கொண்டவர்.இயேசுவின் புரட்சி கருத்துக்கள் ,யூத மத குருமார்களை மிரள வைத்தது . அவரின் செல்வாக்கு அவர்களை பயம் கொள்ள வைத்தது. எனவே அவரைக் கொல்ல அவர்கள் திட்டம் தீட்டினார்கள் .

இந்நிலையில் யூதர்களின் பாரம்பரிய பாஸ்கா திருவிழா நெருங்கி வந்தது. யூதர்கள் தம்மைக் கொலை செய்ய திட்டமிடுவதை அறிந்த இயேசு தம் சீடர்களுடன் அருந்திய இறுதி இரவு உணவு பெரிய வியாழன் எனப்படும் மாண்டி தர்ஸடே அன்று நினைவுக்கூறப்படுகிறது . யூத மரபின் படி விருந்தினர்களின் பாதங்களை ,விருத்தளிப்பவர் கழுவுதல் வழக்கம் .பணக்கார வீடுகளில் இதை செய்ய அடிமைகளை வைத்திருப்பார்கள் இயேசு உணவருந்த துவங்கும் முன் தம் சீடரின் பாதங்களைக் கழுவித் துடைத்தார் .
"நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் யோவான் 13:6-15.." என்று அவர்கள் பாதங்களைக் கழுவினார். இந்நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் பெரிய வியாழன் அன்று தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நடைபெறுகிறது. மேலும் அன்று அந்த இரவு உணவின் போதுதான் , இயேசு தேவ நற்கருணையை ஏற்படுத்தினார் . அதன் நினைவும் , குருத்துவமும் கொண்டாடப்படும் நாள் பெரிய வியாழன்.
இரவுணவுக்குப் பின் இயேசு கெத்சமனி தோட்டத்துக்குச் சென்று ஜெபம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு யூத குருமார்களுடன் வந்த இயேசுவின் சீடன் யூதாஸ் ,"போதகரே வாழி " என்று இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான். இயேசுவை அடையாளம் கண்டு கொண்ட குருமார்களும் ,படை வீரர்களும் அவரைக் கைது செய்தனர் .இந்த "திடீர் கைது" இயேசுவின் முதன்மை சீடர் பேதுருவை நிலை குலைய வைத்தது .தன கையில் இருந்த வாளால் ஒரு படைவீரன் காதினைத் துண்டித்தார் . அவரைக் கடிந்துக் கொண்ட இயேசு , "உன் வாளை உறையில் போடு ,வாளை எடுப்பவன் வாளால் மடிவான் ,எனபதை நீ அறியாயா ? என்று சொல்லி அறுபட்ட காதினை மீண்டும் படைவீரனுக்கு ஒட்ட வைத்து , செவித்திறனை வழங்கினார்.
கைது செய்யப்பட்ட இயேசு , ஆளுநர் பிலாத்துவின் முன் நிறுத்தப்பட்டார் . அவர் மீது வீண் பழி சுமத்தப்படுவதை உணர்ந்த பிலாத்து , அவரை விடுவிக்க வழி தேடினான் . ஆனால் யூத மக்களின் பிடிவாதம் வென்றது. பிலாத்து இயேசுவை சிலுவை மரணத்திற்கு கை அளித்தான். இரண்டு கனமான மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சிலுவையை அவர் மேல் சுமத்தி , தலையில் முட்களால் ஆன கிரீடத்தைச் சூட்டி, , சிவப்பு அங்கியால் அவரைப் போர்த்தி இழுத்துச் சென்றனர். சவுக்கால் அடித்தும், உடலைக் கிழித்து ரத்தம் கொட்டுமளவு கொடுமையான மரணத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள் .
இயேசுவின் சீடர்களில் யோவானைத் தவிர அனைவரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள். அவரின் தாயும், யூத பெண்களும் அவருடன் அந்த சிலுவைப் பாதையில் உடன் சென்றனர். வழியில் வெரோனிகா என்ற பெண் இரக்கம் கொண்டு அவரின் முகத்தைத் துடைத்தார் . வழிப்போக்கனாகிய சீமோன் என்பவரைக் கட்டாயப்படுத்தி அவருடன் அந்த சிலுவையைச் சுமக்க வைத்தனர்.இறுதியில் கல்வாரி மலையில் இயேசு சிலுவையடன் ஆணிகளால் பிணைக்கப்பட்டு , அந்த சிலுவையை மண்ணில் நட்டனர். இயேசு ஆவி துறந்தார். அன்றே அடக்கமும் செய்யப்பட்டார்
இயேசு மரித்த நாளை நினைவுக்கூரும் விதமாக "புனித வெள்ளி" என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரிக்கிறார்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாடு , சிலுவை ஆராதனை என்று சேர்ந்து வழிபாடு நடத்துகிறார்கள் . அன்று விரதங்களும் , உபவாசங்களும் கடைபிடிக்கிறார்கள். கோவில் மணிகள் அன்று ஒலிப்பதில்லை .
புனித வெள்ளியைத் தொடர்ர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. யூத பெண்கள் மூவர் இறந்த இயேசுவின் கல்லறைக்குச் சென்று அவர் உடலுக்கு வாசனை திரவியங்கள் பூச எடுத்துச் சென்றனர் . ஆனால் கல்லால் ஆன அந்த கல்லறை ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். அங்கிருந்த தேவதூதன் இயேசு உயிர்த்தெழுந்ததை அறிவித்தார். இந்நிகழ்சசியின் நினைவாகவே ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இரவு திருவிழிப்பு வழிபாடுகள் தேவாலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது . இந்த வழிப்பாடுகளின் போது மீண்டும் தேவாலய மணிகள் ஒலித்து , இயேசு உயிர்த்ததை ஆனந்தமாக அறிவிக்கின்றன .
மனிதகுலம் அனைத்துக்கும் இயேசு பொதுவானவர் . அவரின் வாழ்க்கையும், மரணமும், உயிர்ப்பும் அவர் கூறிய அறிவுரைகளை விட அதிக செய்திகளைத் தாங்கி நிற்கின்றன. அனைத்து மக்களும் நிறை வாழ்வு பெற வேண்டும் என்றும் அன்பே எல்லா சட்டங்களையும் விட மேலானது என்று உரைத்த இறைமகனை இந்த புனித வாரத்தில் அனைவரும் போற்றி வணங்குகின்றனர்

No comments:
Post a Comment