திரை தந்த பாடல்கள் தொடர்ச்சி
இன்னும் சற்று பின்னோக்கி பார்த்தால் பழைய கிறிஸ்துவ பாடல்கள் சில அருமையாக இருக்கின்றன
1948 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சௌந்தரி .அதில் ஒரு பாட்டு
"அருள்தாரும் தேவமாதாவே ,ஆதியே இன்ப ஜோதி"
இன்று பலரும் அறிந்திடாத ஒரு பாடல் இது . ஒரு முழுமையான கிறிஸ்துவ படமாக அந்நாளில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு ராஜா ராணி கதை. அக்கால இசையில் அமிர்தமாக இனிக்கும் பாடலைப் பாடியவர் பி.ஏ .பெரிய நாயகி
என்னை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா இந்த பாடல் பலரும் கேட்டிருக்க கூடிய பாடல்தான் . இதுவும் தேவமாதாவை போற்றும் பாடல். 1955 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில் வரும் இப்பாடலைப் பாடியவர் லீலா , பாட்டுக்கு தன் உணர்வு பூர்வமான நடிப்பால் உயிர் கொடுத்தவர் சாவித்திரி அம்மா .
"இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?" என்ற தாயே உனக்காக படப்பாடல் இது. மிக மெல்லிய மயிலிறகால் ,காயம் பட்ட பகுதியை வருடிக் கொடுப்பது போன்ற வரிகளும் , இசையும் குரலும் .தாயே உனக்காக படத்தில் இந்த பாடலைப் பாடியவர் வசந்தா !
கண்ணே பாப்பா படம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது .அதில் சுசிலா பாடிய
"சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்"
அந்நாட்களில் இந்த திரைப்படம் ஒரு வெற்றிப்படம் .இந்த பாடலும் பிரபலமான பாடல்
"வாசல் கதவு மூடுவதில்லை ,தேவனின் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்'
இத்தனை அற்புதமான வரிகளை கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் தர இயலும் ?
இன்னும் ஒரு சுசிலாவின் பாடல் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்
"கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ " என்ற ]அன்னை வேளாங்கண்ணி படப்பாடல். கடினமான மனதையும் கலங்க வைக்கும் பாடல் இது . இசையும், வரிகளும் ஒன்றோடு ஒன்று இயைந்து இதயத்தை ஊடுருவும் பாடல் இது.
"மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்"
இது கிறிஸ்துமஸ் காலங்களில் தேவாலயங்களில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் .
"கண்ணே வா ,கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர வா ' என்ற பாடலும் குழந்தையேசுவைப் போற்றி பாடும் பாடல். . ஜேசுதாஸின் தேன் சிந்தும் குரலில் கொஞ்சி கொஞ்சி பாடும் பாடல் இது .
நம் நினைவில் நிற்கும் இந்த கிறிஸ்துவ பாடல்கள் இனிமையும் ,அழகும் சிந்தும் பாடல்கள் .காலங்கள் தாண்டி மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் கானங்கள் ."மதம் ' என்ற சொல்லை அழிப்பான் கொண்டு அழித்து
No comments:
Post a Comment