என்னோட முதல் பட்டு
என்னோட முதல் பட்டு என் திருமணத்துக்கு கணவர் வாங்கியதுதான். இருவருமே மத்திய அரசுப் பணியில் இருந்தவர்கள் .இருப்பினும் அதுவரை பட்டுச் சேலை வாங்கியது இல்லை , உடுத்திக் கொண்டதும் இல்லை . 27 வயத்தில் தான் என் முதல் பட்டு வாய்த்தது .
எங்கள் திருமணம் ஜாதி ,மதம் மறுப்பு திருமணம் , இரண்டு பக்கமும் எதிர்ப்பலைகள் எனவே எளிமையாக பதிவுத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தோம். ஆனால் சேலை மட்டும் பட்டுச் சேலையாக இருக்க வேண்டும் என்று இருவரும் விரும்பினோம் .
வேலூர் மகாராணி சில்க்ஸ் என்ற கடையில் நாங்கள் இருவரும் சென்று வாங்கினோம். 38 ஆண்டுகளுக்கு முன்பு அதன் விலை எண்ணூறு ரூபாய் . மெரூன் கலரில் நேவி ப்ளூ சரிகை பார்டர் சேலை. உடலில் சின்ன சரிகை புட்டாக்கள்
அந்த சமயத்தில் அந்த வண்ண 'காம்போ' பிரபலம் . சில திரைப்படங்களில் கதாநாயகிகள் அதே போல சேலை உடுத்தி , மணமேடையில் அமர்ந்தார்கள் .எனவே பார்த்த உடனே அந்த சேலை பிடித்துப் போனது 2.
ஆகஸ்ட் 21, 1985 எங்கள் திருமணத்துக்கு உறவினர் வீட்டில் இருந்து தயாராகி திருமணப் பதிவு அலுவலகம் போனோம் . அந்த பதட்டமான சூழலில் நான் என் சேலையை ரசித்துக் கொண்டு இருந்தேன். அந்த வழுவழுப்பு , முந்தானை மற்றும் பார்டரின் அழகும் கொள்ளை கொண்டது . அதுவரை பட்டுப்புடவை கட்டி அறியாத நான் அந்த சேலையின் அழகில் சொக்கித்தான் போனேன் . என் நிறத்துக்கு அது பாந்தமாக இருந்தது . பாட்டின் மென்மையும் ,மேன்மையும் நெஞ்சுக்கு இதமாக இருந்தது .
பதிவு அலுவலகத்தில் பெண்கள் அருகில் வந்து தொட்டுப் பார்த்து விட்டு, விலையை விசாரித்தார்கள் .
2☻233333333333333333333333333336 +
. அந்த சேலை மட்டுமே.அதே சேலையில் மாமியார் வீட்டுக்குச் சென்றோம் .அங்கு அவரது உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருக்க ஏகப்பட்ட வசவு,திட்டு . என் மாமியார் அழுத அழுகை இப்போதும் நினைவில் இருக்கிறது. இடையில் சற்று நேரம் அழுகையை நிறுத்தி விட்டு, "சேலை ரொம்ப நல்லா இருக்கே , எங்கே வாங்கினே ,என்ன விலை ??"
ஒரு வழியாக அழுகையை நிறுத்தி உப்புமா செய்து தந்து அனுப்பி வைத்தார்கள்
இப்போது ஒரு அலமாரி நிறைய பட்டு சேலைகள் இருக்கிறது .ஆனாலும் அந்த சேலை ரொம்பவே ஸ்பெஷல் ,கல்யாண சேலை அல்லவா ?
No comments:
Post a Comment