Friday, September 29, 2023

வகிதா ரஹ்மான் - வெற்றிப் பயணம் 

மரியா சிவானந்தம் 


"சலாம் பாபு ,சலாம்  பாபு  என்னைப் பாருங்க 

தங்கக் கையில் நாலு காசை அள்ளி வீசுங்க "   

என்ற பாடல் நினைவில் இருக்கிறதா?   இல்லை என்றால் யூடியூபில்  பார்த்து விடுங்கள்   

அந்த பாடல் இடம் பெற்ற படம்   "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" என்ற முதல் தமிழ் வண்ணப்படம்.  MGR ,பானுமதி நடித்த  இப்படத்தில்  பாடல் காட்சியில் நடனம் ஆடும் நடிகை இன்று செய்தியாகி இருக்கிறார் .அவர் வகிதா ரஹ்மான், இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் நடிகை . வகிதா ரஹ்மானுக்கு  இந்திய அரசின் உயர்ந்த விருதான  தாதா சாகேப் பால்கே  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருது 69 வது  திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு அளிக்கப்படும் .

வகிதா  தமிழ்நாட்டில் ,செங்கல்பட்டில் 3/2//1938 அன்று பிறந்தவர். இவரது தந்தை முகமது அப்துர் ரஹ்மான், தாயார் மும்தாஜ் பேகம் . நான்கு பெண் குழந்தைகளில் கடைக்குட்டியாக  பிறந்தவர். வகிதாவுக்கு மருத்துவர் ஆக விருப்பம்.  மாவட்ட நீதிபதியான  அவரது தந்தையின் மறைவு , வகிதாவை கலைத்துறையை தேர்ந்தெடுக்க வைத்தது . முதல் முதலாக இவர் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் நடனமாடி தன் கலைப்பயணத்தைத் துவக்கினார் . ஆனால் 1956ல் இப்படம் வெளியாகும் முன்பே ,இவர் நடித்த தெலுங்கு படமான ரோஜுலு மராயி’ மற்றும் என்டிஆர் உடன் நடித்த  ‘ஜெயசிம்ஹா’ படம் 1955ம் ஆண்டு வெளியாகி விட்டது . எல்லோராலும் பேசப்படும் நடிகையானார் வகிதா.

அதன் பின்னர் வகிதா  ஏராளமான  இந்திப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் .தயாரிப்பாளர் குருதத் வகிதாவை நல்ல முறையில் ஊக்குவிக்க , சி.ஐ.டி என்னும்  க்ரைம் படத்தில் நடித்தார் . ப்யாசா என்னும் படத்தில விலைமாதாக நடித்தார் .அந்தக் கால கட்டத்தில் அப்படி நடிக்க துணிச்சல் வேண்டும் .இப்படங்கள் வகிதாவுக்கு புகழைக் கொடுத்தன .

பின்னர் சத்யஜித்ரேயின் அபீஜான்  படத்தில் நடித்தார் . 1965  நடித்து ஆர் கே நாரயணனின் 'The Guide " நாவலைப் படமாக எடுத்த போது இவர் தன்னம்பிக்கையும் , தைரியமும் கொண்ட ரோஸியாக நடித்தார் . இப்படம் இவருக்கு முதல் பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது. நீல்கமல் என்ற படம் இரண்டாவது பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.  1971 ஆம் ஆண்டு வெளியான ரேஷ்மா அவுர் ஷேரா தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை இவர் கையில் வைத்தது .

பல இந்திப்படங்கள் இவரது நடிப்பிற்காக ஓடியது . ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருந்தார் வகிதா . திலீப் குமார், ராஜேந்திர குமார் , ராஜேஷ் கண்ணா , ராஜ் கபூர் போன்ற புகழ் பெற்ற கதாநாயகர்கள் தேர்வு செய்யும் நாயகியாக இருந்தார்.தேவ் ஆனந்துடன் இவர் அதிகமாக படங்கள் நடித்துள்ளார்.

 எழுபதுகளின் துவக்கத்தில் இருந்தே அவர் தன் கதா பாத்திரங்களை பரிட்சார்த்த  முறையில்  தேர்வு செய்தார் . குணசித்திர வேடங்களில்  பல படங்களில் நடிக்கத் தொடங்கினர் . பின்னர் அக்கா ,அம்மா வேடங்களில் நடித்தார் .

தலைச் சிறந்த நடிகையான வகிதா மூன்று முறை பிலிம் பேர் விருதுகள், ஒரு தேசிய விருது , வாழ்நாள் சாதனையாளர் விருது,  பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது என்று விருதுகள் குவித்தார்.  90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். . சிறுவயதில் இருந்தே நடனம் கற்பிக்கப்பட்டதால் , அருமையாக நடனம் ஆடுவார். 85 வயதாகும் வகிதா கமல்ஜித்தை  திருமணம் செய்துக் கொண்டார் .இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  கணவரின் மரணத்துக்குப் பின் பெங்களூரில் வசித்து வந்தார் . 

60  ஆண்டுகளுக்கு மேல் இவரது கலைப் பயணம் தொடர்கிறது, நர்கிஸ் .மீனா குமாரி. ஸ்மிதா படேல் போன்ற நடிகைகளுடன் வைத்து போற்றப்படுகிறவர் . இவர் சமீபத்தில்  தமிழில் கமல் நடித்த விசுவரூபம் 2 படத்தில் கமலின் அம்மாவாக நடித்துள்ளார்.வகிதா ரஹ்மானின் வெற்றி மிக்க கலைப் பயணத்துக்கு இந்த தாதா சாகேப் பால்கே விருது  மேலும் சிறப்பு சேர்க்கிறது .  

வாழ்த்துக்கள் வகிதாரஹ்மான் 

 



DEv Anand many success movies 

Guruthath mentor CID , draama pyasaa 

sathyajithre Abijaan ,The  guide 1965  ,filmfare awrad 

neel kamal 2nd film fare 

thilp kumar, rajenra kumar ,rajesh khanna ,raj kappor 

1971 Reshma  our seraa best actress 

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த விருது 2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

தமிழில் விஸ்வரூபம் 2ம் பாகத்தில் கமலின் தாயாகவும் அவர் நடித்திருந்தார்


Thursday, September 28, 2023

 மண்ணாளும்  பெண்  சக்தி 

மரியா சிவானந்தம்   


இந்திய வானில் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது ...

முப்பதாண்டுகளாக வாக்குறுதிகளாகவும் ,விவாதப் பொருளாகவும்  விளங்கிய பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு, இப்போது  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதாவாக வடிவம் பெற்றுள்ளது  . 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 50% பெண்கள் இருக்கும் சூழலில் 33% எனப்படும் கோரிக்கை மேலும் வலு பெற்று  உள்ளது .அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வைக்கும் துருப்புச் சீட்டு இந்த 33%  இட ஒதுக்கீடு  என்றாலும் ,  தாமதமாக கிடைத்த இந்த வெற்றி ஆனந்த அதிர்வலைகளை மக்களிடையே எழுப்பி  உள்ளது. இன்றைய கணக்குபடி 542 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 78 எம்.பிகளே பெண் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. இந்த மசோதா செயலாக்கப் பட்டால்   181 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் . இது போலவே மாநிலங்கள் அவையிலும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் . 


மாநில சட்டமன்றங்களுக்கும்  இந்த ஒதுக்கீடு பொருந்தும். நாடெங்கும்  பெண் எம்.எல்.ஏக்கள்  மற்றும் எம்.பிக்கள் எண்ணிக்கை மாறும்.  பெண்களுக்கான தொகுதிகள் அதிகமாக்கப்படும் . இவை எல்லாம் இந்த மசோதாவின் நேர்மறை சங்கதி. அதே நேரத்தில் , இந்த மசோதாவின் ஒரு பகுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதில் பெறப்படும் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகள்  மறு சீரமைப்பு  செய்யப்படும். அதன் பின்னரே மூன்றில் ஒரு தொகுதி பெண்களுக்கென ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .இவை நடத்தி முடிக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மசோதா காகிதத்தில் மட்டுமே இருக்கும். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது அமல்படுத்தப்படாது என்றே நினைக்க வேண்டி உள்ளது . 

இருப்பினும் இந்த மசோதா நம் அனைவருக்கும்   பெரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நம் விகடகவி வாசகர்கள் இருவரிடம்  இது பற்றிய கருத்துக் கேட்டோம் .

நாம் முதலில் அணுகியது திருமதி .தி.பரமேசுவரி ,எழுத்தாளர் ,கவிஞர் .தணியாத ஆர்வம் கொண்டு மாணவர் உலகைச்  சீரமைக்கும்  தலைமை ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைச் சிறந்த தலைவரான ம.பொ.சி யின் பேத்தி . 

",பெண்களுக்கான  இந்த இட  ஒதுக்கீடு எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள் ?"

" 33% இட ஒதுக்கீடு என்பது பெண்களின் குறைந்தபட்சக் கோரிக்கை. உலகம் ஆணும் பெண்ணும் நிறைந்தது இணைந்தது.   எந்த செயலையும் நிறைந்து செய்கையில் அது சிறப்பாக முடியும். இரு பாலினரின் இடையில் இருக்கும் ஆதிக்க உணர்வுகளே நல்லிணக்கத்தை அழித்துவிட்டது. பெண்கள் வெளியில் இயங்குவதை விரும்பாத ஆதிக்கவுணர்வு, அதை ஒடுக்க நினைக்கிறது. அதற்கு மதம், அரசு, அதிகாரம் ஆகியவை உதவி புரிகின்றன.

பெண்களால் வெளியில் வந்து இயங்க இயலாது என்று அவளது உடல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக் காட்டுவர். ஆனால் பெண்களின் இயல்பான இயங்குதன்மை ஆச்சர்யமூட்டுவது. உளவியலாகவும் பெண்களின் தாங்குதிறன் ஆற்றல் அதிகம். நிர்வாகத்திறனும் சிறப்பானது" 

"பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் தன்  கணவர், சகோதரன் போன்றவர்களைப் பின்னணியில் வைத்து அவர்களது கட்டளைப்படி இயங்குவதாக சொல்கிறார்கள் .இந்த 33% சட்டம் அமலுக்கு வந்தால் இந்த சூழல் மாறுமா ?

"இப்போதைக்கு பெண்கள் பொம்மைகள் போல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் இச்சூழல் மாறும்போது அந்த மாற்றம் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். ஜெயலலிதா எனும் பெண் முதல்வர் தான் பொது இடங்களில் தாய்ப்பால் தரும் இடம் ஒதுக்கச் சிந்தித்தார். பெண் காவலர்களுக்கு ஏற்ற உடைகளைச் சீர் செய்தார். பெண் காவல் நிலையங்கள் அதிக அளவில்  உருவாக்கப்பட்டன. இப்போது அரசுப்பள்ளி மாணவியர் அணியும் சீருடைகளை வடிவமைத்தது ஜெயலலிதாவின் மேற்பார்வையில்தான் .

இப்போதைக்குப் பல பெண் நிர்வாகிகள் ஆண் குரலைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தாலும் நாளடைவில் இச்சூழல் மாறும். இப்போதே, இயங்க வெளியற்று இருந்த பெண்களில் சிலர், கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது."  என்றார். 

அடுத்து நாம் சந்தித்தது திரு.தியாகமூர்த்தி, பொறியியல் வல்லுநர்.  டான்சானியா நாட்டில் பொறியாளராக பணியாற்றி இந்தியா வந்துள்ளார்.  சமூக அக்கறையும் , பொறுப்பும் கொண்டவர் .

அவரிடம் ," இந்த  மசோதா பற்றி என்ன நினைக்கிறீர்கள். இதில் ஆண்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?"  என்றோம் .

"இது நம் நாட்டில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் . இதனால் தகுதி உள்ள பெண்கள் ஆட்சி பங்களிப்பை அளிக்க முடியும். ஆனால் இங்கு பார்க்கும் போது ,பெண்கள் பணி புரியும் இடங்களில்  நிலவும் சூழல் அழுத்தம் தருவதாக இருக்கிறது. வீடு, பணி இரண்டிலும் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிக அழுத்தத்தை சந்திக்கிறார்கள் . இரவு எட்டுமணிக்கு மேல் பணியில் இருந்து திரும்பும் பெண்கள் அந்த நேரத்தில் காய்கறிகள் ,மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை  நான் பார்க்கிறேன். பெண்களின் வேலையை ,வீட்டில் உள்ள ஆண்களும் மற்றவர்களும் இன்னும் பகிர்ந்துக் கொள்ளாத சூழலைப் பார்க்க முடிகிறது .பெண்களின் வலியை புரிந்து  ஆண்கள்  பொறுப்புகளை  பகிர்ந்துக் கொண்டால் ,பெண்கள் எல்லா இடங்களிலும் தம் முத்திரையைப் பதிப்பார்கள் .இதுவே முதலில் நாம் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் " என்றார் .

இருவருக்கும் விகடகவி சார்பில் நன்றி .

சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்தி   முதல்  பல பெண் தலைவர்கள் சீரிய முறையில் தொண்டாற்றி  வந்துள்ளனர். பெரும்பாலும் அரசியல்  குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அவ்வாறு அன்றி எளிய பின்னணி கொண்ட    புதிய தலைமுறை பெண் தலைவர்கள் நம்மிடையே உருவாவார்கள்.  

அவர்கள்  பெண்களின் நலனை தாண்டி  நாட்டின் நலத்துக்காகவும்  சிந்திப்பவர்களாக விளங்குவார்கள். ஒரு புதிய சமூக மாற்றம் இங்கு நிச்சயம் விளையும் அதற்கு 33%  இட ஒதுக்கீடு துணை நிற்கும், .


 


.It is a welcome move by Government. This will help deserving ladies to get their opportunity. However there are a few issues the working ladies face at the workplace and at their home. These ladies deserve co-operation, and encouragement at the workplace. Unfortunately their duties and responsibilities at home remain same which increases their working hours causing a lot of physical and mental stress. Sharing of the household duties and responsibilities by the house matadies running back es will assist ladies perform better at their work place. It is a pathetic scene to see ladies running back home from their workplace with vegetables, eatables, groceries etc at 8pm to continue their household works.


முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள ஒரு பகுதிதான். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே மசோதாவில் உள்ள மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.




Thursday, September 21, 2023

பாரசீக மண்ணில்  மூவாயிரம் இரவுகள் 
மரியா சிவானந்தம் 

செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பது போன்ற  துன்பம்  வேறொன்று இல்லை . அதுவும் அயல்நாட்டில், முகம் தெரிய ஊரில் அரசியல் கைதியாக, பிணைக் கைதியாக சிறையில் அடைக்கப் படுவது   பெருந்துயரம் .  ஈரான் என்று நாமகரணம் பூண்ட பாரசீக மண்ணில் மூவாயிரம் இரவுகள் , இன்னும் சரியாக சொல்வதானால் 2898 இரவுகளைச் சிறையில் கழித்த சியமச்  நமாசி அமெரிக்காவின் பொறியாளர். இனி சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பார் .அவருடன் ஈரான் ஏவின் சிறையில் இருந்த மேலும் நான்கு  அமெரிக்க அரசியல் கைதிகளும் இப்போது விடுவிக்கப் பட்டுள்ளார்கள். 


இந்த வார துவக்கத்தில் ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த ஐந்து  பேரும் விடுவிக்கப்பட்டு , ஈரானுக்கு   அனுப்பப்பட்டார்கள். கத்தாரின் அமெரிக்க தூதர் டிம்மி நேவிஸ் அவர்களை நேரில் சென்று வரவேற்றார்.

சியமச்  நமாசி  2015 ஆம் ஆண்டுஅரசியல் கைதியாக குற்றம்  சாட்டப்பட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை  பெற்றவர். அவரை விடுவிக்க முயற்சி எடுத்த அவர் தந்தை பக்கீர் நமாசி சிறையில் இருந்து விதடை செய்யப்பட்டார்  ஈரான் சென்றபோது அவரும் கைதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . ஓராண்டுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் , ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் தடை விதிக்கப்பட்டது . 

   2018 ஆம்  ஆண்டில் மொரட் தபாஸ் என்னும் சுற்றுச் சூழல் ஆர்வலர் தன் நண்பர்களுடன்  ஆசிய சிறுத்தைகளைப் பற்றி ஆரய்ச்சி செய்ய  ஈரான் வந்தார் .அவர் பாரசீக வனவிலங்கு பாரம்பரிய நிறுவனத்தின்  (Persian Wildlife Heritage Foundation) உறுப்பினர்.  அவருடன் வந்த எட்டுப் பேரும் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாக பத்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார்கள். கொடுஞ்சிறையில் மொரட் ,உடல் நலம் குன்றி கொடுமை அனுபவித்த போது, பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International ) தலையிட்டு அவர்களை விடுவிக்க கோரியது. ஆனால்   இப்போதுதான் அவருக்கு விடிவுகாலம் பிறந்தது .

இமாட் ஸர்ஜி இரட்டை குடியுரிமை பெற்ற அமெரிக்க வணிகர் . ஈரானிலும் குடியிருக்க தகுதி பெற்றவர் .இவர் தன் மனைவியுடன் 2018 ஆம் ஆண்டில் இங்கு சுற்றுப்பயணம் செய்ய வந்தார். இருவரையும் அமெரிக்க உளவாளியாக சந்தேகப்பட்டு , டெஹ்ரான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் . இமாட் சர்ஜிக்கு பத்தாண்டு சிறைக்காவல் கிடைத்தது . இவருடைய விடுதலைக்காக இவரது மகள்களும் ,சகோதரியும் அமெரிக்க அரசிடம் பலமுறை முறையீடு செய்தனர். போராட்டங்களை நடத்தினர். இப்போது  இறுதியில் நீதி வென்றது ,தாமதமாக. 

 மூவரும்  ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்தாக குற்றம்  சாற்றப்பட்டு  சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் .மற்ற இருவர் பிற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிப்பவர்கள். அரசியல் கைதிகள்  உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென்று உலக சட்டங்கள் சொல்கின்றன .ஆனால் உண்மையில் அவர்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.விசாரணை என்ற பெயரில் அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் , பல ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து மன உளைச்சலிலும் ,உடல் உபாதையிலும் மரித்துப் போவர்கள் பலர். இப்போது இந்த விடுதலை ஒரு ஆசுவாச பெருமூச்சைத் தருகிறது / 
  
அமேரிக்கா ஈரான் இரு நாடுகளும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் ஈரான் இவர்களை விடுதலை செய்திருக்கிறது .
இந்த விடுதலைக்கு பரிசாக , ஏற்கனவே நிலவி வரும்  பொருளாதார தடையால் தென்கொரியாவில் அமெரிக்கா முடக்கி வைத்திருந்த  ஈரானின் ஆறு பில்லியன் டாலர் பணத்தை அமேரிக்கா விடுத்துள்ளது. அத்துடன் அமெரிக்க சிறையில் இருக்கும் ஐந்து ஈரானிய கைதிகளை அமெரிக்கா விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.  

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவு பதட்டம் நிறைந்த உறவு என்று உலகமே அறியும். இன்று , நேற்றல்ல  நூற்றாண்டு கால பகை இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகிறது. 1980 இல் இருந்து இந்த அரசியல் பகை இன்னும் இறுக்கமாகி உள்ளது.  கொமேனி காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும்  , ஈரானுக்கும்  சுமுக உறவு நிலவவில்லை.  ஈரானுக்கு பாகிஸ்தானும் , பாகிஸ்தானுக்கு ஈரானும் ஒருவருக்கொருவர் நேசத்துடன் உதவிகளை செய்வது உலகம் அறியும் . அமெரிக்காவுக்கு ஸ்விட்சர்லாந்து நேசநாடு . எனவே ஈரானும் அமெரிக்காவும்  பாகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தூதரகங்கள் வழியாகவே  பேச்சு வார்த்தைகளை நடத்துவது வழக்கம் .

ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தடுக்க அந்நாட்டின் மேல் பொருளாதார தடை விதித்தது.ஆனால் ஈரான் தொடர்ந்து தனது அணு சக்தி திட்டங்கள் ,அணு ஆயுத தயாரிப்புக்கு ஆனது இல்லை என்று  சொன்னது . . 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஈரான் அதை உறுதி செய்வதாக அறிவித்தது . 

அதற்கு பின்னர் ஒபாமா ஆட்சியில் அமேரிக்கா ஈரான் மேலிருந்த பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் போட்டது. ஆனால் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து மேலும் தடைகளை இறுக்கினார். ஈரானும் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி வருவதாக செய்திகள் வருகிறது. அரசியல் உறவு, வணிக பரிமாற்றம்  இவை இரண்டுமே உலகமயமாக்கலின் முக்கிய அங்கங்கள். அவை  இல்லாத போது பொருளாதார சரிவுகள் சாதாரணமாக நிகழ வாய்ப்பு உள்ளது . 

. இந்நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது.  பல ஆண்டுகள்  கொடுமையான சிறை வாசம் அனுபவித்தவர்கள் இப்போது பெறும் விடுதலை, இறந்துப் போனவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்ததுக்கு சமம். ஸ்யாமச் நமாசி சொல்வது போல , 'என் வாழ்க்கையின் சிறந்த பகுதியை நான் இழந்து விட்டேன்.ஒரு பிணைக்கைதியாக 2898 நான் கழித்த காலம் என் வாழ்க்கையில் திருடப்பட்ட காலமாகவே கழிந்தது . நானும் என் குடும்பமும் அனுபவித்த சித்திரவதைகளை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது . ஆனால் நிஜத்தில் பலர் இன்னும்  இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். "  மரணத்தை விட கொடுமை அல்லவா இது ?


அமெரிக்கா  இவர்களுக்கு பதிலாக விடுதலை செய்யவிருக்கும் ஐந்து இரானிய கைதிகளுக்கும் இவர்களைப் போலவே சொல்ல சோகக்  கதைகள் உண்டு . கைதிகளை, குறிப்பாக அப்பாவி பிணைக் கைதிகளை உரிய மரியாதையுடன் நடத்த  உலக நாடுகள்  உறுதி ஏற்க வேண்டும் . ஐக்கிய நாடுகள் சபை,பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற சர்வதேச அமைப்புகள் அவ்வப்போது உறுப்பினர் நாடுகளில் உள்ள பிணைக்கைதிகளின் நிலைமையை ஆராய்ந்து  , அவர்களின் துயர் துடைக்க உதவி செய்ய வேண்டும்.

Friday, September 8, 2023

 விண்வெளியில் நம்  கொடி -II 

மரியா சிவானந்தம் 


தலைமுறை தாண்டிய ஓர் இந்தியக் கனவு நனவாகி இருக்கிறது .

 இது போன்ற  சாதனை ஓரிரவில் நிகழ்ந்து விடுவதில்லை. இதற்கான பெருமையும், உரிமையும்  ஒருவருக்கானதும்  அல்ல. இந்தியாவின் இன்றைய விண்வெளி சாதனை ஓர் இமாலய சாதனை . அறிவியலும் ,தொழிற்நுட்பமும் கை கோர்த்த  போது அவற்றை உயர்த்திப் பிடிக்க நிதியும் , அரசின் உதவியும் இருந்ததால் மட்டுமே  இந்த வெற்றி சாத்தியமானது .இந்த வெற்றி மகுடத்தை பாரத அன்னையின் தலையில் சூட்டி நாம் அழகு பார்க்கிறோம்.

இந்திய விண்வெளி அறிவியல் அறிஞர்களின் அறிவும், ஆற்றலும் ,உழைப்பும் எவர்க்கும் குறைந்தது அல்ல.  விக்ரம் சாராபாய் தொடங்கி சதிஷ் தவான், அப்துல் கலாம் ,மாதவன் நாயர்   என்று பெயர் பெற்ற அறிஞர்கள் விண்வெளி பயண திட்டங்களுக்கு வித்திட்டு, நீர் சொரிந்து, உரமிட்டு வளர்த்தனர். இவர்களின் அனுபவமும் , பயிற்சியும், உழைப்பும் எல்லா  விண்வெளி திட்டங்களிலும் இருப்பதை நாம் அறிவோம் .  அவர்களின் தொலைநோக்கு இன்று  கனி பறிக்க செல்பவருக்கு   சுலபமாக்கி உள்ளது. 

இத்தலைமுறையில் அண்ணாதுரை மயில்சாமி, சிவன் ,வனிதா முத்தையா  வீரமுத்துவேல்  போன்ற விஞ்ஞானிகள்  மங்கள்யான் ,சந்திரயான், ஆதித்யா L 1 போன்ற விண் பயண திட்டங்களில்  குறையற்ற உழைப்பை நல்கி இருக்கிறார்கள் . ஒரு விண்வெளி திட்டம் தோல்வி அடைந்தாலும் ,தோய்ந்து போகாமல். தோல்விகளில் இருந்து கற்கும் மனோபாங்குடன் அடுத்தடுத்த திட்டங்களை மேம்படுத்திக் கொண்டே சென்றனர் .  

இந்த இரண்டு தொடர் வெற்றிகளில்  பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு  அபாரம் சந்திராயன் 3 வெற்றிக்குப் பின்னர், .பாரதப் பிரதமரே  இஸ்ரோவுக்கு வந்து ,நேரில் பெண் விஞ்ஞானிகள், பொறியியல் அறிஞர்களுடன் உரையாடி தன் மகிழ்சசியைத் தெரிவித்தார் .

வனிதா முத்தையா போலவே மினல், அனுராதா, ரிது கரிதால், மௌமிதா தத்தா ,நந்தினி ஹரிநாத் போன்ற  பெண் விஞ்ஞானிகள்  இஸ்ரோவின் பல திறப்பட்ட துறைகளில்  தலைமைப் பொறுப்புகளை ஏற்று இந்த விண்வெளி திட்டங்களுக்கு  பங்காற்றி உள்ளனர். 

இந்த வரிசையில் ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி   தன்னிகர் இல்லாத உழைப்பைத்  தந்து ,இஸ்ரோவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய விண்வெளிப் பயண சரித்திரத்திலும் இடம் பெற்றுள்ளார் . ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த, தமிழகத்தைச் சேர்ந்த     பெண்மணி , விண்ணைத் தொடும் சாதனையை நிகழ்த்தி இருப்பது நம் அனைவரையும்  பெருமையில் ஆழ்த்தி உள்ளது .

தென்காசி மாவட்டம் ,செங்கோட்டையை சேர்ந்த நிகர் சுல்தானா. படிக்கும் போதே அறிவியலில் ஆர்வம் உள்ளவர் . திரு.ராமமந்திரம் அரசினர் பள்ளியில் படிக்கும் போது இந்திய அறிவியல் கழகத்தின் ஊக்கத் தொகை  பெற்று படித்தார்.ப்ளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது .இருப்பினும் பொறியியல் துறையில் உள்ள ஆர்வம் காரணமாக திருநெல்வேலி  பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  , மின்னணுவியல், தொலைத் தொடர்பு  (Electronics &Communications ) பொறியியல் படித்தார் .

இளங்கலை படித்த உடனே இஸ்ரோவில்  சேர்ந்தார் . முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில் சேர்ந்து மூன்று மாதங்களில் இஸ்ரோவின் பெங்களூர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.செயற்கை கோள் பராமரிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர் , தொடர்ந்து செயற்கை கோள் தயாரிக்கும் பணியில் இருந்துள்ளார் . விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ,அமெரிக்கா ,ஸ்காட்லாண்ட் போன்ற நாடுகளில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். விண்கல கருவிகளைப் பற்றி நாசாவில் பயிற்சி பெற்று இருக்கிறார் .

நிகர் ஷாஜியின் திறமையால் பதவி உயர்வுகள் அவரைத் தேடி வந்தது.ஆதித்யா L 1 விண்கலம் விண்ணேற்றம் செய்யப்பட்ட நாளில் திட்ட இயக்குனரான  நிகர் ஷாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்தன .  அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத்  அவர்களுடன் ,திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி ஆதித்யாவின் வெற்றிப்பயணத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்த போது , அந்த கம்பீரத்தை உலகமே ரசித்தது. தமிழகமோ ,"எங்கள் மகள் "என்று பெருமையுடன்   உச்சி முகர்ந்தது. அடுத்த சிலமணி நேரங்களில் அவரது புகைப் படமும், விடுத்த செய்திகளும்  இணைய தளங்களில் வைரல் ஆயின. 

பெருமைக்குரிய விண்வெளி பயண திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் அசாதரண செயலை நிகர் ஷாஜி நிகழ்த்தி காட்டி உள்ளார் .கல்வி ஒன்றே எளிய மக்களை உச்சத்துக்கு ஏற்றும் ஏணி என்பதை இந்த  "சூரியப் பெண் ' நிரூபித்துள்ளார்.   நம்  குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு  நிகர் ஷாஜி ஒரு 'ரோல் மாடல்' 

பெற்றோருக்கு நிகர் ஷாஜி விடுத்த செய்தி ஒன்று நம் கவனத்தைக் கவர்கிறது .'உங்கள் மகன்  ஒரு பெரிய வீட்டில் வசிக்கலாம். அவன் ஒரு பெரிய காரில் ஓட்டுனருடன் பயணம் செய்யும் வசதியை நீங்கள்  தந்திருக்கலாம் .நல்ல உணவு, பியானோ ,பெரிய திரை தொலைக்காட்சி என்று வசதியான வாழ்வை தர முடியும் என்றாலும் , . நீங்கள் தோட்டத்தில் புல் வெட்டிக் கொடு இருக்கையில் அவன் உங்களுடன் இருக்க செய்யுங்கள். தன் சகோதர சகோதரிகளுடன் வீட்டில் பாத்திரம் கழுவ பழக்குங்கள்..அரசு பேருந்தில் பயணம் செய்ய சொல்லுங்கள் .  உங்கள் குழந்தைகளை சரியான விதத்தில் அன்பு செய்வது என்பது  இப்படித்தான் :" என்கிறார் அவர் .

எத்தனை அருமையான அறிவுரை.ஆடம்பர வாழ்க்கையே அழகான வாழ்க்கை என்பது போல இருக்கும் இந்த காலத்தில் ,எளிமையான வாழ்வியலை உணர்த்தி இருக்கிறார் . இவரது இக்கூற்று ஒரு ஆங்கில பொன்மொழியை நினைவுறுத்துகிறது .

"Only touching the sky doesn't define your success. The real success story will be, if you don't take your feet off the ground while touching the sky"

ஒரு அற்புதமான பெண்மணியாக , ஒரு குழுவை மட்டும் அல்ல , ஒரு சமுதாயத்தை நடத்தவல்ல கருத்துக்களுடன் நிகர் ஷாஜி ஜொலிக்கிறார் .

இனி வரும் இந்திய விண்வெளிப் பயணங்களில் இன்னும் ஏராளமான வனிதா முத்தையாக்கள் , ரிது கதிரால்கள், நிகர் ஷாஜிகள்  உருவாக்கப்படுவார்கள் .

மனிதரை ஏற்றி வலம் வரும் ககன்யான் திட்டமும் ,இதே நேரத்தில் செயல்பட தொடங்கி விடும். முதல் 'ஆளில்லா 'ககன்யான் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.  பின்னர் போக இருக்கும் ககன்யான் கலத்தில்  நம் ஊர் கல்பனா சௌலாக்கள் பயணப்படுவார்கள் . 

பெண் சக்தி பேசப்படும் சக்தியாய் விளங்கும் .

இது காலத்தின் கட்டாயம் அல்ல , காலத்தின் கட்டளை .

 

Thursday, September 7, 2023

 விண்வெளியில் நம் கொடி -II

மரியா சிவானந்தம் 

 

இந்தியாவின் விண்வெளி சாதனைகள்  ஓரிரவில்  நிகழ்ந்தது அல்ல , அச்சாதனைக்கான பெருமையும்  ஒருவருக்கு   மட்டும் உரிமையானது  இல்லை.  இது தலைமுறைகள் தாண்டிய ஓர் இந்தியக் கனவு. பல்லாண்டுகள் திட்டமிட்டு, பல்வேறு  நிலைகளில்  பரிசோதிக்கப்பட்டு,  அதற்கான நிதியும், உழைப்பும், தொழிற்நுட்ப அறிவும், பயிற்சியையும்  மூலதனமாக்கி பெற்ற வெற்றி  இது. இது அரசின் வெற்றி ,மக்களின் வெற்றி ,  இந்திய விஞ்ஞானிகளின்  வெற்றி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவருக்கு அடுத்ததாக, ஆதித்யா-எல்1 திட்டத்தின் இயக்குநரான நிகர் ஷாஜி மேடையேறினார். தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டம் செங்காேட்டையை பூர்வீகமாகக் கொண்ட அவர் மேடையேறி, ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் திட்டக்குழுவின் கனவு நிறைவேறியுள்ளது, என்றார்.

விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக அவர் கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

“விண்கலம் தனது 125 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. விண்கலம் இலக்கை அடையும்போது, இந்திய விண்வெளித்துறையின் மிகப்பெரிய பொக்கிஷமாக ஆதித்யா-எல்1 இருக்கும்,” என்றார். அரங்கம் மீண்டும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட நிகர் ஷாஜி, 1987 ஆம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் செங்கோட்டையில் உள்ள திரு இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த நிகர் ஷாஜி குறித்து அவரின் சகோதரர் ஷேக் சலீம் பிபிசியிடம் பேசினார்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தும் அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகவே அவர் பொறியியல் படிப்பை தேர்வு செய்ததாகக் கூறினார் சலீம்.

“நிகர் ஷாஜி பள்ளியில் படிக்கும்போது இருந்தே அவருக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அவர் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும், தேசிய அறிவியல் மையத்தின் கல்வி உதவித்தொகையின் மூலமாகத்தான் படித்தார்,” என்றார் சலீம்.

அரசுப்பள்ளியில் நிதி உதவி பெற்று படித்தது குறித்து பேசினார் சலீம். அந்தக்காலத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி இருந்தாலும், அதே பள்ளி வளாகத்தில் ஆங்கில வழிக்கல்வியும் இருந்ததாகக் கூறும் அவர், அதற்கு ரூ 15 கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.

“எங்கள் தந்தை 1940-களிலேயே கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார். ஆனால், அவர் தான் படித்த படிப்பு சார்ந்த பணியில் அதிகம் நாட்டம் செலுத்தாமல், விவசாயத்தில் இறங்கினார். அதில் சில புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், எதுவும் கைகூடவில்லை. அதனால், குடும்பத்தின் பொருளாதார சூழல் என்பது வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்தது எனக் கூறலாம்,” என்றார்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் படித்துள்ளார் நிகர் ஷாஜி.

1986 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து முடித்த உடன், அந்த ஆண்டே செய்தித்தாளில் இஸ்ரோ வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, நிகர் ஷாஜி அதற்கு விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சலீம்.

“அப்போதெல்லாம் அடிக்கடி பொறியாளர்கள் வேண்டி இஸ்ரோ சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வரும். அவர் ஜூன், ஜூலை மாதம் தனது பொறியியல் படிப்பை முடித்தார்.

முடித்ததுமே, ஆகஸ்ட் மாதம் ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்த 83 பேரில், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் நிகர் ஷாஜி தான் முதலிடம்,” என்றார் சலீம்.

முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிய நிகர் ஷாஜி, மூன்று மாதங்களுக்கு பின்னர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் பணியில் இருந்த நிகர் ஷாஜி, பின் செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில் இருந்துள்ளார்.

நிகர் ஷாஜி, ஆதித்யா- எல்1 திட்டம் மட்டுமின்றி, இதற்கு முந்தைய சந்திரயான் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். மூன்று தசாப்தத்திற்கும் மேலான நிகர் ஷாஜியின் இந்தப் பயணத்தில், அவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து அமெரிக்கா, ஸ்காட்லேண்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சிக்காக சென்று பணியாற்றியுள்ளார்.

“தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்,” என்றார் சலீம்.

குறிப்பாக, விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏழு கருவிகளில், சூரியனைத் தவிர, அவற்றில் இருந்து வரும் துகள்கள் உள்ளிட்டவையை ஆய்வு செய்வதற்காக பூமி நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு மாதத்திற்கு குறைவான நாட்கள் நிகர் ஷாஜி அங்கு பயிற்சி பெற்றதாகப் பகிர்ந்துகொண்டார் சலீம்.

1987 ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்த பிறகு, 2000 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, நிகர் ஷாஜியுடன் இருந்தவர்கள் சிலர் தகவல் தொழில்நுட்பத்திற்கு மாறியதாகக் கூறிய சலீம், நிகர் ஷாஜியும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற நினைத்ததாகக் கூறினார்.

ஊதிய கமிஷன்(Pay Commission) வருவதற்கு முன்பெல்லாம் இஸ்ரோவில் குறைந்த அளவே சம்பளம் இருந்ததாகக் கூறும் சலீம், அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரோவை ஒப்பிடும்போது, அப்போது வளரத் தொடங்கிய தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்ததாகக் கூறினார்.

“அதனால், பணி மாறலாமா என்று ஒரு சிந்தனையில் இருந்தார் என் தங்கை. ஆனால், முழுக்க முழுக்க அரசுச் செலவில் படித்து வந்துள்ள நாம், சமூகத்திற்காகத்தான் பணியாற்ற வேண்டும் என நான் தான் இஸ்ரோவிலேயே பணியைத் தொடரச் சொன்னேன். நான் உட்பட என் சகோரிகள் வரை அனைவரும் அரசுப்பள்ளியிலும் கல்லூரியிலும் மாநில பாடத்திட்டத்தில் தான் படித்தோம்,” என்றார் அவர்.

தற்போது பெங்களூரில் தனது 85 வயதான தாயுடன் வசித்து வரும் நிகர் ஷாஜி, கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே சிறந்த விஞ்ஞானியாக பதவி உயர்வு பெற்றார். சுமார் எட்டு ஆண்டுகளாக ஆதித்யா-எல்1 திட்டத்தில் பணியாற்றி வரும் நிகர் ஷாஜியின் கணவர் வளைகுடா நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஷாஜியின் மகன் நெதர்லேண்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

சந்திரயான் 1 திட்டத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, சந்திராயன் 3 திட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது, ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“நம் நாட்டின் விண்வெளித் துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல் கல்லாக இருக்கும் ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்,” என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.

 விண்வெளியில் நம் கொடி -I 

மரியா சிவானந்தம் 


விண்ணை முட்ட பறக்கும்  இந்தியக்கொடி இன்று விண்வெளியில் பறக்கிறது .

சந்திராயன் 3 நிலாவின் பரப்பில் கொடி நாட்டிய வெற்றிக்கதையை நாம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்ளும் தருணத்தில் , அந்த மகிழ்சசியை இரட்டிப்பாக்கும் விதமாக ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட செய்தி நம் செவிகளில் விழுந்து  பரவசத்தைத் தருகிறது. உலக அரங்கில் நான்காவது சூரியவெளி  ஆராய்ச்சியாளராக இந்தியா  தலை நிமிர்ந்து நிற்கிறது. இம்மாபெரும் சாதனைக்கு காரணர்களாக விளங்கும் இந்திய அரசையும், விண்வெளி ஆரய்ச்சியாளர்களையும் நாம்  இருகரம் கூப்பி வணங்குகிறோம்.. 

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான் , நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் திட்டங்களைப் போலவே  சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.  2008 இல் உருவாக்கப்பட்டு, பல்வேறு பரிசோதனை நிலைகளைத் தாண்டி. சென்ற வாரம்  செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவான் மையத்தில் இருந்து PSLV C57 (Polar satellite launch Vehicle)ராக்கெட் மூலம்  ஆதித்யா L1 செலுத்தப்பட்டது .

விண்ணோக்கி பாய்ந்த  ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு, தரையில் இருந்து 648 கி.மீ உயரத்தில் , ஆதித்யா விண்கலம் பிரிக்கப்பட்டு ,விண்கலத்தின் இயந்திரம் இயங்க  துவங்கியது. இவ்வாறாக இந்தியாவின் முதல் சூரிய விண்வெளித்திட்டத்துக்கு நெற்றிப் பொட்டு வைக்கட்டுள்ளது .

முதல் பதினாறு நாட்களுக்கு ஆதித்யா விண்கலம் புவியின் சுற்று வட்டப் பாதையிலேயே (Earth’s Orbit) பயணிக்கும். பின் அதில் இருந்து விலகி சூரியனின்  halo Orbit  பாதையில்  பயணிக்கும். 125 நாட்களுக்குப் பின்னர், .பூமியில் இருந்து 1.5 மில்லியன் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் 1 (Lagrangian Point 1)  பகுதியில் ஆதித்யா L 1 விண்கலம் நிறுத்தப்பட்டு சூரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் .சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் ,க்ரோமோஸ்பியர், சூரிய மண்டல சுழல்கள் போன்ற  பகுதிகளை இந்த விண்கலம்  ஆய்வு செய்யும். இந்த ஆய்வு சூரிய மண்டலத்தின் கதிர்வீச்சு,  துகள்களின் சுழற்சி, வெப்பம்  காந்த மண்டலம் போன்றவற்றை ஆழமாக ஆராயும். 

 இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ஆதித்யா விண்கலத்தில்  மொத்தம் ஏழு முக்கிய உபகரண கட்டமைப்புகள் (Pay Loads)    உள்ளன, இந்த ஆய்வு சாதனங்களில்  நான்கு கருவிகள்  சூரியனின் வளி  வீச்சு, நிறப்பிரிகைகள், புற ஊதா கதிர்களை ஆய்வு செய்யும் இந்த  கருவிகளில் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளும் அடங்கும் VELC (Visible Emission line Coronagraph), SUIT (Solar Ultra violet imaging Telescope), SoLEX ( Solar low energy Xray Spectrometer), HELIOS – High Energy L1 Orbiting Xray spectrometer ) என்ற நான்கு கருவிகள்  நிரல் செய்யப்பட்டபடி தம்  பணியைச் செய்து ,  பதிவு செய்வதை படங்களாக, தரவுகளாக அனுப்பி வைக்கும் .

மற்ற மூன்று கட்டமைப்புகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை ஆராய்ந்து கணிக்கும்      விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.ASPEX ( Aditya Solar Wind Particle Experiment) PAPA (Plasma analyser package for Aditya ) என்ற கருவிகளுடன் அதி நவீன காந்தமானியும் (Advanced tri - axial   High resolution  digital Magneto meter) உள்ளன. இங்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் சேலம் இரும்பாலையின் 304L 2.5, 6.0,6.5,மிமீ   ரக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடுகள் ஆதித்யாவின் வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது .ராஞ்சியின் Heavy Engineering Corporation (HEC) நிறுவனம் தன் முழு உழைப்பையும் ஆதித்யாவின் கட்டுமானத்துக்கு அளித்துள்ளது . L & T  ,BHEL  போன்ற நிறுவனங்களின் பங்களிப்பும்  ஆதித்யாவின் சூரிய ஆய்வு திட்டத்தில்  இருக்கிறது.

ஆதித்யாவின் விண்வெளி பயணத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் , வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் மையம் ,இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சசி கழகம் ஆகியவை பெரும்பங்கு ஆற்றி உள்ளன.

சூரியனே ,பூமியின் முழுமுதற் சக்தி. மனுக்குலத்தின் வாழ்வுக்கு, சூரியனைப் பற்றிய ஆய்வு மிகவும் முக்கியம். சூரியனின் பண்புகள், சூரிய புயல்கள் , அதன் வளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்கள் இவற்றை விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஆய்வு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல். விண்வெளியில் இருந்து பூமியின் படத்தை ஆதித்யா பதிவு செய்து அனுப்பி இருப்பதை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது .

  . ஆழ்ந்த அறிவும் , அனுபவமும் கொண்ட நம் நாட்டு  விஞ்ஞானிகள் தம் அயராத முயற்சியாலும் உழைப்பாலும்  இந்த விண்ணை முட்டும் வெற்றியைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் . 

ஆதித்யா L1 விண்கலத்தின் ஆயுள் ஐந்து ஆண்டுகள். இந்த திட்டத்துக்காக 380 கோடிகள் .இதுவரை செலவிடப்பட்டுள்ளது . இந்தியாவைப் பற்றி ஏளனமாக நினைத்த உலகநாடுகள் மத்தியில் ,இந்த சூரிய விண்வெளிப் பயணம் பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளது. நம் நாட்டைப் பற்றிய கேலிப்  பிம்பங்கள் எல்லாம் நொறுக்கப்பட, நாம் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தும் தருணம் இது.

இதை சாத்தியமாக்கிய விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் .ஆதித்யா L 1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி ,நிகரில்லா சாதனையைப் படைத்துள்ளார் .

நிகர் ஷாஜி  பற்றியும் ,ஏனைய  விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் பற்றியும் அறிந்துக் கொள்வோம்.   



Sunday, September 3, 2023

 




வெற்றிக் கூட்டணி -சந்திராயன் 3 

மரியா சிவானந்தம் 

எத்தனை அற்புதமான தருணம் இது 

" உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் போது நள்ளிரவு நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டிருந்தது."  என்று ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை நம் நினைவுக்கு வருகிறது.  விதியுடன் ஒரு புதிய உடன்படிக்கை செய்துக் கொண்டோம் என்ற அந்த கவித்துவம் நிறைந்த உரை இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது .அதே உணர்வை நாம் இப்போது அனுபவிக்கிறோம்  இந்தியா விடுதலை வாழ்வைத் தரிசித்த அந்த இரவின் மகிழ்ச்சியை,  பரவசத்தை மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அனைவரும் இப்போது  அனுபவித்தோம். 

பொன் கிடைத்தாலும் ,கிடைக்காத இந்த  புதன் 23/08/2023 அன்று  இந்திய வரலாற்றில் ஒரு நிசமான பொன்னாள். அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனாவும்  விண்வெளியில் வல்லரசுகளாக வலம் வரும் காலத்தில்  இந்தியா தன்  விண்வெளி ஆய்வின் ஒரு புதிய  மைல்கல்லை நாட்டியுள்ளது. இந்தியாவின்   சந்திராயன்3 விண்கலத்தை நிலவின் பரப்பில் 'மெல்ல' இறங்கிட   வல்லரசுகளின் வரிசையில் நம் நாடு இடம் பிடித்துள்ளது .   இன்று உலக  மக்கள் அனைவரும் புருவத்தை உயர்த்தி இந்தியாவை வியப்புடன் உற்று நோக்குகிறார்கள். சினேகமுடன் நூறாயிரம் கைகள் நீள்கின்றன நம்முடன் கை குலுக்க.  .

இந்தியாவின் இந்த வெற்றிக்குப் பின் இஸ்ரோ  அறிவியல் அறிஞர்களின் நல்ல  கூட்டணி உள்ளது .  விண்வெளி பற்றிய  சிறந்த அறிவும், ஆற்றலும், உழைப்பும் கொண்ட கூட்டணி இது. எந்நாட்டவர்க்கும் குறைவில்லா அர்ப்பணிப்பு,    தொழிற்  நுட்ப அறிவு, கட்டுக்கோப்பான ஒத்துழைப்பு,  குழு ஒருங்கிணைப்பு   என்று வெற்றிக்குத் தேவையான அத்தனையும் கொண்டது இந்த கூட்டணி  . நடுவண்  அரசின் ஒத்துழைப்பு, பிரதமர் தந்த உற்சாகம், முறையான நிதி ஒதுக்கிடு  எல்லாமே இந்த திட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது ,

திரை மறைவில் இருந்து இந்த திட்டத்துக்கு வழி நடத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் . இஸ்ரோ தலைவர்  எஸ் .சோமநாத் . இந்த விண்வெளி பயணத்தின் மூளையாக செயல்பட்டு வழி நடத்தியவர் . ககன்யான் .ஆதித்யா L 1போன்ற திட்டங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் சோம்நாத் விக்ரம் சாராபாய் விண்வெளி கழகத்தின் இயக்குனராக இருந்தவர் .    ரோவர் லேண்டர்  சந்திரனில் இறங்கிய போது. "India is on the moon" என்று உற்சாக குரலெழுப்பினார் சோம்நாத். 1969 ஆம் ஆண்டு நிலவில் கால் வைத்த போது  one small step for manone giant leap for mankind  என்று  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொன்ன சரித்திர புகழ் மிக்க  வாக்கியம் தந்த  மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத மகிழ்ச்சியை தரும் சொற்றொடர் இது. 

  சந்திராயன்3 விண்வெளிப் பயணத்தின் முதுகெலும்பாக இருந்து ,முழு உழைப்பையும் தந்தவர் வீரமுத்துவேல். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் . விழுப்புரத்தில் ரயில்வே துறையில் பணி புரிந்து ஒய்வு பழனிவேலுவின் மகன். விழுப்புரம் ரயில்வே பள்ளியில்  உயர்நிலைக் கல்வி பெற்ற பின் DME எனப்படும் டிப்ளமோ படிப்பை படித்தார். அப்போது பொறியியலில் ஆர்வம் ஏற்பட்டு, சாய்ராம் பொறியியல்  கல்லூரியில்  இளங்கலை  பொறியியல்  படித்தார். முதுகலை  பொறியியல்  படித்தது ஆர்இசி திருச்சி  .  அதிக ஆர்வத்துடன் படித்ததால்  தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டார் .

கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தார் வீரமுத்துவேல். விண்வெளி ஆராய்ச்சி மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் டிசைன் விங் இன்ஜினியராக பணியில் அமர்ந்தார் .அங்கு ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டரில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.அதன் பின் அவரது கனவு பணித்தளமான இஸ்ரோவில் சேர்ந்தார் .

இஸ்ரோ அவரது கனவுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்தது முதலில் திட்ட பொறியாளர் (Project Engineer) திட்ட மேலாளர் (Project Manager) போன்ற பதவிகளில் செம்மையாக பணியாற்றினார் . மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட பல ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் தனது பங்களிப்பை நிறைவாக செய்தார் . விண்வெளி ஆராய்ச்சியில் குறையாத ஆர்வம் காரணமாக சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து Vibration separation  of Electronic package in satellitesஎன்ற தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற் கொண்டார் அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார் . விரைவில் முனைவர் பட்டம் பெற்றார் ..

அதன்பின் இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு முத்துவேலு அவர்களுக்கு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவினார் . சந்திரயான்-2 திட்டத்தின் உதவி திட்ட இயக்குநர் பொறுப்பில் இருந்தவருக்கு. சந்திரயான்-3 திட்டத்தில் திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தனது பணியைச் சரியாக திட்டமிட்டு , சந்திரயான்-3 குழுவினை வழி நடத்தி, எல்லா சிக்கல்களையும் ,தொழிற்நுட்ப சவாலையும் எதிர்கொண்டு , சரியான தீர்வுகளை அளித்து ரோவர் லேண்டரை soft landing முறையில் நிலவில் மேற்பரப்பில் தரை இறக்கினார் . ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாள் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் , நினைவில் வைக்க கூடிய தருணத்தை அளித்தார் . ஒரு தமிழனாக நாம் அவரைக் கொண்டாடினாலும் , தான் ஒரு இந்தியனாக பெருமை கொள்வதாக அவர் கூறுவது அவரது விரிந்த மனதையும் , இந்த பாரத மண்ணின் மேல் வைத்த நேசத்தையும் குறிக்கிறது.

இந்த சந்திராயன் 3 விண்வெளி ஆரய்ச்சிக் குழுவில் துணை திட்ட இயக்குனர் கே .கல்பனா , மிஷன் இயக்குனர் எஸ் . மோகன் குமார் ,விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் உன்னிகிருஷ்ணன நாயர் , எம்.சங்கரன் ,இயக்குனர் (U R Rao Satellite Centre ,URSC) என்.ராஜாராம்  தலைவர் (Launch Authorisation Board (LAB) போன்ற விஞ்ஞானிகளின் பங்களிப்பும் போற்றுதலுக்கு உரியது . 

இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகளின் பணியும் ,திறமைகளும் எல்லோராலும் புகழப்படுகிறது. .சந்திராயன்2 வனிதா முத்தையா திட்ட இயக்குனராக பொறுப்பேற்ற போது உடன் மிஷன் இயக்குனராக இருந்தவர் ரித்து கரித்தால். அப்போது முக்கிய பொறுப்பில் 20% மேல் பெண் விஞ்ஞானிகள்  பணியாற்றினார். சந்திராயன்3 விண்வெளி பயண திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து சிறந்த பணியாற்றி இருக்கிறார்கள் .

இந்த வெற்றிக் கூட்டணியில், இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் .என் .எல் கை கோர்த்துக் கொள்கிறது .  300 Mbps மற்றும் 100 Mbps   உள்ளிட்ட  Leased line Circuits வழியாக   பி எஸ் .என் .எல்   நிறுவனம் , தடை  இல்லாத  இணைப்பை வழங்கி இருக்கிறது .பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இங்கே இருக்கும் போது  ,அரசு நிறுவனமானபி எஸ் .என் .எல்  லுக்கு இந்த வாய்ப்பை இஸ்ரோ வழங்கி இருப்பது பெருமைக்குரிய செய்தி .

ரோவர் லேண்டர் கலம் தன் இயக்கத்தைத் தொடங்கி விட்டது . ரோவரில் உள்ள ராம்பா ,இல்சா ,சாஸ்டே  போன்ற ஆய்வுக்கருவிகள் இயங்கத் தொடங்கி உள்ளன .அவை நிலவின் மேற்பரப்பு வெப்பம் ,நிலஅதிர்வுகள் ,அயனி கூறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் .அனைத்து கருவிகளும் திட்டமிட்டபடி சீராக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது . 

வெற்றிக் கூட்டணிக்கு விகடகவியின் வாழ்த்துக்கள் 

       

  • ANI. 3/6. Mohana Kumar, Mission director. ...
  • Agencies. 4/6. S Unnikrishnan Nair, VSSC director. ...
  • Agencies. 5/6. M Sankaran, URSC director. ...
  • Agencies. 6/6. A Rajarajan, LAB chief.

S Somanath, ISRO Chairman

P Veeramuthuvel, Chandrayaan-3 Project Director


P Veeramuthuvel took charge as the Project Directo9r of Chandrayaan-3 in 2019. Aged about 46 years, he hails from a small family in Tamil Nadu's Villupuram district. PhD holder Veeramuthuvel is an alumnus of the prestigious Indian Institute of Technology, Madras.


“அரசுப் பள்ளியில் படித்தேன்; ஆவரேஜ் மாணவன்தான். ஆனால்...” - சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் உத்வேகப் பகிர்வு
“அரசுப் பள்ளியில் படித்தேன்; ஆவரேஜ் மாணவன்தான். ஆனால்...” - சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் உத்வேகப் பகிர்வு
சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் தமிழகம் சற்றே கூடுதல் பெருமிதத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். "மாணவர்களே, சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு P. வீர முத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம் என்கிறார்" என்ற அறிமுகக் குறிப்புடன் அவர் அந்தக் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
அதில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பைக் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். பள்ளியில் படித்தவரை நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடன்ட் (சராசரி மாணவன்). அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் எனக்கிருந்ததில்லை. பெற்றோர், குடும்பம் தரப்பில் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) படிப்பில் சேர்ந்தேன்.
படிக்கும்போது இன்ஜினியரிங் மேலே எனக்கொரு விருப்பம் வந்தது. அதனால் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் பெற இயன்றது. மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன்.
அதேவேளையில் இந்த மதிப்பெண்ணுக்காக எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும்போது 100 சதவீத கவனத்துடன் நன்றாகப் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்தது. அதன் விளைவாக ஆர்இசி திருச்சி கல்லூரியில் எம்இ முதுநிலை படிப்பில் இணைந்தேன். இளநிலை போல் முதுநிலை படிப்பிலும் நன்றாகப் படித்தேன். 9.17 சிஜிபியுடன் முதுநிலை படிப்பை முடித்தேன்.
கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன். வேலை செய்துகொண்டிருந்த போதே ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டானது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில் டிசைன் விங் இன்ஜினியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து எனது கணவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் (திட்ட பொறியாளர்) பின்னர் ப்ராஜக்ட் மேனேஜராக (திட்ட மேலாளர்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் பணியாற்றியுள்ளேன். இருந்தும் நான் எனது ஆராய்ச்சிக் கனவைக் கைவிடவில்லை. அதற்காக சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன். வைப்ரேஷன் செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்ஸ் எனப்படும் தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகள் பேப்பர் பிரசன்டேஷன் செய்து வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன்.
இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளோம். சந்திரயான்-2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன்.
நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்துக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், 100 சதவீதம் ஈடுபாடு அதுவும் எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும். கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நன்றி என்று கூறியுள்ளார்.
நன்றி: இந்

He succeeds Vanitha, who was the project director of the Chandrayaan-2 mission under the leadership of former ISRO Chief K Sivan. Before this, he had held the position of Deputy Director at the Space Infrastructure Programme Office at ISRO's main office.

S Unnikrishnan Nair, Director of Vikram Sarabhai Space Centre (VSSC)

Friday, September 1, 2023

 உயிரோடு விளையாடாதீங்க 

மரியா சிவானந்தம் 


இந்தியா சந்திராயன்-3 வெற்றிக்களிப்பில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில், தமிழகத்தில்  தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரத்தில் ஒரு வீட்டில் அழுகையும், புலம்பலும்  இருந்தது .

அவ்வூரைச் சேர்ந்த லோகநாயகி என்னும் பெண் பிரசவத்தில் மரித்துப் போனார்.  பிரசவ இறப்பு விழுக்காடு மிகவும் குறைந்த தமிழகத்தில் இந்த இறப்பு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், இந்த பிரசவத்தை இயற்கை முறையில், வீட்டிலேயே நடத்தியது அவரது கணவர் மாதேஷ் .யூடூயூப்  பார்த்து தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தார் மாதேஷ், அவருக்கு உதவியாக அவரது நண்பர் பிரவீன் இருந்தார். பிரசவத்தில்  சிக்கல்  ஏற்பட்டு லோகநாயகி உயிர் இழந்தார்.

லோகநாயகி கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் . இளம் வயதில் இருந்தே இயற்கை வாழ்வியல் முறையில் ஆர்வம் கொண்டவர். அதற்கேற்ற முறையில் அவரது  உணவு வழக்கங்களை அமைத்துக் கொண்டவர். அவருக்கும்  மாதேஷுக்கும் திருமணம் முடிந்த பின்பு இருவரும் முழுமையாக இயற்கை உணவுகளை , காய்கறிகளைப் பயன்படுத்தி வந்தார்கள் . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லோகநாயகி கர்ப்பம் அடைந்தார். அப்போது தன் கணவரிடம் இயற்கையாய் தனக்கு பிரசவம் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த மாதேஷ் தானே வீட்டில் பிரசவம் பார்த்திருக்கிறார் . ஆண் குழந்தை  நலமுடன் பிறந்தது.  ஆனால் நச்சுக்கொடி வெளி வராமல் சிக்கல் ஏற்பட்டது. ரத்தப்போக்கு அதிகமாகி  சிறிது நேரத்தில் லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது ,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் அறிவித்தார் . 

இந்த வருந்தத்தக்க நிகழ்ச்சி பெரும் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது.   பிரசவத்துக்கு முன்பு வரை அரசு கிராம செவிலியர் இடம் மருத்துவ ஆலோசனை பெற்று வந்த லோகநாயகி, தனியார் மருத்துவ விடுதியில் பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு சென்று இருக்கிறார். பின்னர் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொண்டு உயிர் இழந்துள்ளார்.கிராமச்  செவிலியர்  புகார் கொடுக்க, மாதேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  என்ன செய்து என்ன, அறியாமையால் ஒரு  உயிர் பலியாகி விட்டது !

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் உள்ளது. ஏறத்தாழ 1500 சுகாதார நிலையங்கள்,தவிர முழுமையாய் தயார் நிலையில் உள்ள அரசு மருத்துவமனைகள் , மருத்துவக் கல்லூரிகள் உள்ளன . நல்ல விதத்தில் தேர்ச்சி பெற்ற  மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் என்று ஒரு மருத்துவப்படையே 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது . தமிழகத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 99.8% பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதாகவும், பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் விகிதம், (ஒரு லட்சம் பிரசவத்தில்  58 பேர்) என்று   மிகவும் குறைவாக இருப்பதும் தமிழகத்தில்தான் .

தவிர அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையில்  கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்தே கண்காணிப்பு,  பேறுகால  பரிசோதனைகள் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது . பண உதவி, மருந்துகள் எல்லாமே தரப்படுகிறது. தரமான சிகிச்சையும், பத்திரமான பிரசவமும்  உறுதி செய்யப்படுகிறது .

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நம் பட்டி காலத்தில் வீட்டில் மருத்துவச்சி உதவியுடன் பிரசவங்கள் நடைபெற்றன . அக்கால மருத்துவச்சிகள் அனுபவம் மூலமாகவே நல்ல முறையில் பிரசவம் பார்த்தார்கள் . 15000 பிரசவம் பார்த்த மருத்துவச்சி என்று செய்தித்தாளில் செய்தி படித்திருக்கிறோம். ஆனால் அக்காலத்தில் .   பிரசவத்தில் தாயோ , குழந்தையோ இறப்பதும்  அதிகம், பின்னர் கிராமப்புறங்களில் பிரசவத்துக்கு பயிற்சி கொடுத்து மருத்துவ உதவியாளர்களை தயார் 

. இப்போது காலங்கள் மாறி விட்டன. முறையான பரிசோதனை முறைகள், தடுப்பூசி , சத்து மாத்திரைகள் எல்லாமே பயிற்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் தேவைப்படுகின்றன. குழந்தையின் வளர்ச்சி ஸ்கேன் வழி அறியப்படுகிறது. ஏதேனும்   சிக்கலை யூகித்தால் .அதற்கு ஏற்ற வழியில் சிகிச்சை முறைகள்  பரிந்துரைக்கப்படுகிறது . இயற்கை முறையா , சிசேரியன் அறுவை சிகிச்சையா என்பது வரை முன் கூட்டியே திட்டமிடப்படுகிறது .

அரசு மருத்துவமனைகளில் இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு பெண் வீட்டில்  பிரசவம் பார்த்து உயிர் விட்ட பரிதாபம் நம்மை கவலை கொள்ள வைக்கிறது .அப்பெண் ஆசிரியையாக பணி செய்தவர் .அவரது அறியாமை அல்லது  இயற்கை வழி பிரசவத்தின் மேல் வைத்த அதீத நம்பிக்கையா என்று புரியவில்லை.  நாம் பெறும் கல்வி இது போன்ற அடிப்படை உண்மைகளைப் புரிய வைக்கவில்லை என்பது பெரும் சோகம்.

தனியார் மருத்துவமனைகளில் நோய் சிகிச்சை மட்டுமல்ல, பிரசவம் போன்ற  அடிப்படை சிகிச்சைகளுக்கு பெரும்  பணம்  செலவிட  வேண்டி உள்ளது. ஆயிரங்கள் காலாவதி ஆகி லட்சத்தில் பில் வருவது சாதாரண மக்களுக்கு  சுமையாக இருக்கிறது . இந்த  நேரத்தில் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக பிரசவம் பார்த்துக் கொள்வது சிறந்தது. 

 தாயின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு  மற்றும் குழந்தையின் கருவளர்ச்சி, கருப்பையில் அதன் இருப்பிடம் ,இதயத்துடிப்பு என்பதை மருத்துவமனையில் கருவிகளின் உதவியுடன் தான் செய்ய முடியும். பிரசவத்தின் முதல்,இரண்டாம் மூன்றாம் நிலைகளில் தாயின்  நிலைமை வைத்தே என்ன விதமான பிரசவம் என்று மருத்துவர்கள் முடிவு செய்ய முடியும் . எதிர்ப்பாராத சிக்கல்கள் , ரத்த தேவை , பிராண வாயு  போன்ற தேவைகளுக்கும் மருத்துவமனை தான் ஒரே சிறந்த தேர்வு .

வீட்டில், யூட்யூப்  பார்த்து செய்வது என்பது விஷப் பரீட்சை ஆகும். பிரசவம் என்பது சமையல் குறிப்பு அல்லவே, யூட்யூப்  பார்த்து செய்ய!ஒரு முட்டாள்தனமான காரியம் இல்லையா இது 

 ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும் பெண் உடலாலும் ,மனதாலும் மறு  பிறவி எடுக்கிறாள் . எனவே அனாவசிய பரிட்சார்த்த  முறைகளை  முயற்சி செய்யாமல், அனுபவம் ,பயிற்சி மிக்க மருத்துவமனைகளில் பிரசவத்துக்குச் செல்ல வேண்டும் .

தாயும் , சேயும் நலமாக  இருக்க  எல்லா முன்னெச்சரிக்கைகளையும் கடை பிடியுங்கள்.  மருத்துவமனையில் சுகப் பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள் 

உயிர்களோடு விளையாட வேண்டாம் .



 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...